TECHNOLOGY
வேற்று கிரக வாசிகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை அமெரிக்க ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் போர்ட் மையர்ஸ் நகரில் உள்ள புளோரிடா கல்ஃப் கோஸ்ட் பல்கலைக்கழகத்தின் கணிதவியல் பேராசிரியர் தாமஸ் ஹேர். இவர் கணக்குகளின் அடிப்படையில் வேற்று கிரக வாசிகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதில் தெரியவந்த தகவல்கள் பற்றி அவர் கூறியதாவது:
நம் சூரிய குடும்பம் மற்றும் அதை சார்ந்த கோள்கள், விண்கற்கள் போல இன்னும் எத்தனையோ சூரியன்கள், நட்சத்திரங்கள் இருக்கின்றன.
நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு கூட்டம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறும் இருக்கிறது. ஆனால், அவர்கள் உணவு சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நம்மை போலவே இருப்பார்களா என்பது சந்தேகம். அவர்கள் வேறு மாதிரியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
ஒருவேளை, அப்படி யாராவது எங்காவது இருந்தால் நம்மை கண்டுபிடிப்பதும் சிரமம் அல்ல. அவர்களது இடத்தில் இருந்து பயணிக்க தொடங்கியிருந்தால் 500 ஆண்டுகளிலேயே நம்மை அடைந்திருக்கலாம்.
அதுபோன்ற சம்பவம் இதுவரை நடக்கவில்லை. அதனால், அனேகமாக அதுபோல யாரும் இல்லாமல் இருக்கலாம். அல்லது, நம்மை கவனிக்காமல் அவர்கள் கடந்துபோயிருக்கலாம். அல்லது, எங்கும் பயணப்படாமல் அவர்கள் தங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பவர்களாகக்கூட இருக்கலாம். மேலும், வேற்று கிரக வாசிகள் இருந்தால் அவர்களை பார்த்து பயப்படவும் அவசியம் இல்லை. அவர்கள் எல்லா வளங்களும் நிறைந்தவர்களாகத்தான் இருப்பார்கள். பூமியில் இருந்து தண்ணீரோ, வேறு எதுவுமோ இல்லை.
மடிக்கக்கூடிய உந்துருளி கண்டுபிடிப்பு
கண்டுபிடிப்புக்கள் இன்று பல வகையில் அதிகரித்து கொண்டு இருக்கிறது அந்த வகையில் புத்தம் புதிய வகை உந்துருளி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என்பது முக்கியத்துவம் பெறுகிறது அது எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது என்றால் அந்த ஸ்கூட்டர் வகை உந்துருளி மடித்து வைத்து கொண்டு கையில் கொண்டு செல்லக்கூடியதாகும் பயணங்களின் போது கைகளிலேயே மடித்து எடுத்துச்செல்லக்கூடிய மிகவும் எளிமையான எலக்ரானிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சந்தைக்கு வரவுள்ள இந்த ஸ்கூட்டரானது 4,000 யூரோ பெறுமதிப்பை உடையது. அத்துடன் பல சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது என்றும், விரைவில் இதன் சிறப்பம்சம்களின் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிகிறது.
இணையத்தின் வழியே நாம் ஒரு கணணியில் இருந்து மற்றொரு கணணிக்கு தகவல்களை பரிமாற முடியும். நமது தகவல்கள் முதலில் சிறு சிறு பாக்கெட்டுகளாக பிரிக்கப்படும். இந்த பாக்கெட்டுகள் மற்றொரு கணணியை அடைய வேண்டுமானால் அதற்கு நெட்வொர்க் அமைப்பும், அடுத்தடுத்த நெட்வொர்க் தளத்தினை அடைய ஒரு இன்டர்நெட் புரோடோகால் முகவரியும் தேவைப்படுகிறது. இணையத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு முகவரி மாறுகிறது. இதனை எப்படி அமைத்திட வேண்டும் என்பதனை பன்னாட்டளவில் பிரதிநிதிகளைக் கொண்டு இயங்கும் இன்டர்நெட் அமைப்பு முடிவெடுக்கிறது.
இதனை இன்டர்நெட் சேவையினை வழங்கும் நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. இது போன்ற ஒரு பொது கட்டமைப்பில் இருந்தால் தான் அனைத்து இன்டர்நெட் செயல்பாடுகளும் அனைவராலும் இயக்கப்பட முடியும். இதுவரை ஐபிவி4 என்ற கட்டமைப்பில் இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த கட்டமைப்பில் மேற்கொண்டு பெயர்களை அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. எவ்வளவு வகைகளில் அமைக்க முடியுமோ, ஏறத்தாழ அந்த எண்ணிக்கையில் முகவரிகள் அமைக்கப்பட்டுவிடக் கூடிய சூழ்நிலை இன்னும் சில மாதங்களில் உருவாகிவிடும். எனவே புதிய கட்டமைப்பு ஐபிவி6 என்ற பெயரில் இன்டர்நெட் சேவை அமைக்கப்பட்டு இதுவரை சோதனை செய்து பார்க்கப்பட்டது.
இது அனைத்து வழிகளிலும் சரியானது என்று உறுதி செய்யப்பட்டதால், இனி அந்த அமைப்பே பின்பற்றப்படும். இதற்கான அறிமுக நாள் வரும் ஜூன் மாதம் 16ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் வரலாற்றில் இந்த இன்டர்நெட் பெயர் அமைப்பு அறிமுகம் செய்யப்படும் நாள் மிக முக்கியமான நாளாக வரும் காலத்தில் எண்ணப்படும். ஐபிவி4 அமைப்பு முகவரியில்(32 பிட் கட்டமைப்பு) ஏறத்தாழ 400 கோடி இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்படும். 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலேயே இதில் 90% பயன்படுத்தப்பட்டு விட்ட நிலை உருவானது. அதே ஆண்டு அக்டோபரில் மிச்சமிருக்கும் நிலை 5% ஆக உருவானது.
நாளுக்கு நாள் இன்டர்நெட் தளங்களும் அவற்றிற்கான பெயர்களும் வேகமாக உயர்ந்து வரும் நிலையில், ஐபிவி4 அமைப்பில் மேலும் பெயர்களை உருவாக்க இயலாத நிலை எட்டப்பட்டுவிடும் என்ற அபாயம் உணரப்பட்டது. இதனால் ஐபிவி6 (128 பிட்) அமைப்பு உருவாக்கப்பட்டது. இது முந்தைய அமைப்பினைக் காட்டிலும் எளிதான முறையில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இனி இரண்டு அமைப்புகளிலும் உருவாக்கப்பட்ட முகவரிகளை இன்டர்நெட்டில் இயங்கும் நெட்வொர்க் நிறுவனங்கள் கையாளும்.
Subscribe to:
Posts (Atom)
No comments:
Post a Comment